நேற்று முன்தினம் நேட்டோ படையினருக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்குத் தயாராய் இருந்த 160 வாகனங்கள் மீது தாலிபான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன. 3 பேர் பலியாயினர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்கள் நேட்டோ படையினரின் வாகனங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ஜீப்கள் உள்ளிட்ட நேட்டோ படையினரின் 100 வாகனங்கள் எரிக்கப் பட்டன. ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட முதல் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைய செய்திகள்
செவ்வாய், 9 டிசம்பர், 2008
சனி, 6 டிசம்பர், 2008
காங்கிரஸிலிருந்து நாராயண் ராணா சஸ்பெண்ட்!
மஹாராஷ்டிரா ரெவன்யூ அமைச்சர் நாராயண் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மும்பை தாக்குதல் சம்பவ இடத்தைத் திரைப்பட இயக்குனரையும் நடிகரையும் அழைத்துச் சென்று பார்வையிட்டதால் ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக பதவி விலகிய மகாராஷ்டிரா முதலைச்சர் தேஷ்முக்கிற்கு மாற்றாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட அஷோக் சௌஹானை எதிர்த்து, காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாக நாராயண் ராணா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகவும் நாராயண் ராணா விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகவும் நாராயண் ராணா விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேக தனிக்கணினி அறிமுகம்
அமெரிக்காவின் NVIDIA என்ற நிறுவனம் உலகின் அதிவேக தனிக்கணினியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சாதாரண தனிக்கணினியை விட 250 மடங்கு வேகமுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெஸ்லா என்று அறியப்படும் இக்கணினியின் விலை 4,000 முதல் 8,000 பவுண்ட் வரை இருக்கும். இவ்வகைக் கணினிகள் முதலில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தனிக்கணினி உற்பத்தியாளரான Dell நிறுவனமும் பொதுமக்கள் உபயோகத்திற்காக டெஸ்லா கணினியை விரைவில் அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளது.

இராக்கில் குண்டு வெடித்து 5 பேர் பலி
இராக்கில் இன்று இரு வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலியாயினர். 15 பேர் காயமுற்றனர்.
எண்ணெய் வளமிக்க கிர்குக் நகர காவலர் பயிற்சி மையத்தில் காவலர் பணியில் சேர்வதற்காக வந்திருந்த கூட்டத்திற்கு வெடிகுண்டு கட்டிக்கொண்ட ஒருவர் புகுந்து வெடிக்கச் செய்தார். இதில் காவலர் தேர்வு அதிகாரி கொல்லப்பட்டார். 15 பேர் காயமுற்றனர்.
பாபில் மாகாணம் அல் இஸ்கந்திரியா மாவட்டத்தில் கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் 4 பேர், கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர்.

16 இராக்கியர்கள் அமெரிக்கப் படையினரால் கைது
பாக்தாதின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல் ஷர்கி எனப்படும் சந்தையில் 16 இராக்கிய பொதுமக்களை அமெரிக்கப் படையினர் கைது செய்து இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வரும் சனவரி 31ஆம் நாள் இராக்கில் மாகாண தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த புதன்கிழமை இராக்கின் தேர்தல் ஆணையத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த பாகிர் யாசின் அல் தமீமி என்ற அதிகாரியை அவரின் வீட்டுக்குள் சென்று அவரது குடும்பத்தார் முன்னிலையில் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு அமெரிக்கப் படையினர் எந்தவித காரணமும் இதுவரைக் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளி, 5 டிசம்பர், 2008
பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவிலும் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. எண்ணெய் நிறுவங்கள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்ததால் விலையைத் தற்பொழுது குறைக்கும் சாத்தியம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறி வந்தார்.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் பேரலுக்குக் கச்சா எண்ணெயின் விலை 45 டாலரை விட குறைவான விலைக்குச் சரிந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெட்ரோலிற்கு லிட்டருக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 2 ரூபாயும் குறைக்க முடிவாகியுள்ளது. இந்த விலைக்குறைவு உடனடியாக இன்று இரவு முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

வியாழன், 4 டிசம்பர், 2008
டில்லி விமான நிலையத்தில் பதட்டம்
டில்லி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆறு தீவிரவாதிகளை காவலர்கள் சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. NSG கமோன்டோக்களின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. வெள்ளை நிற அம்பாசிடர் கார்களில் வந்த தீவிரவாதிகள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)