ஹைதராபாத் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை சுட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டது. இவர்கள் தீவிரவாதிகளாகவே இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பழைய ஹைதராபாத் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று பகல் 1.30 மணியளவில் அந்தப் பகுதியை முற்றுகையிட்ட போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
ஒரு ஹார்ட்வேர் கடையில் சோதனைக்காக போலீசார் நுழைந்தபோது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு காவலர் பலத்த காயமடைந்தார். இன்னொருவர் லேசான காயத்துடன் தப்பினார். போலீசாரை சுட்ட நால்வருமே தப்பியோடிவிட்டனர்.
இவர்கள் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களாகவே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக