அண்மைய செய்திகள்

புதன், 3 டிசம்பர், 2008

சிசேரியன் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர அதிக வாய்ப்பு!

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என டச் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதாரண குழந்தைகளைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது, அவர்களுக்கு 8 வயது வரை ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு 80 சதவீதம் அதிகம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3000 குழந்தைகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது. சிசேரியனில் பிறக்கும் குழந்தைகளின் தாய், தந்தையர்களுக்கு அலர்ஜி முதலான சுவாசப் பிரச்சனைகள் இருக்கும் எனில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு இதனை விட அதிகம் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. சிசேரியன் குழந்தைகளுக்கும் அலர்ஜிக்கும் இடையில் தொடர்பு உண்டு என்பது முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக