அண்மைய செய்திகள்
புதன், 3 டிசம்பர், 2008
கெமிக்கல் அலிக்கு தூக்குத் தண்டனை
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் சகோதரர் "கெமிக்கல் அலி" என்றறியப்படும் மாஜித் (வயது 67) என்பவருக்கு இராக்கின் நீதி மன்றம் நேற்று தூக்குத் தண்டனை விதித்தது. 1991ஆம் ஆண்டு ஷியா பிரிவினருக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இது இவருக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது மரண தண்டனையாகும்.1988ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான குர்து இனத்தவரைக் கொன்றார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீர்ப்பை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், தீர்ப்பு வாசித்து முடிந்ததும் "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறினார்.இவர் தவிர, "பாத்" (சதாம்) கட்சியின் தலைவர் அப்துல் கனி அப்துல் கப்பார் என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக