அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றுள்ள பராக் ஒபாமாவின், ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளைத் திரும்பப்பெறுவதற்கான திட்டத்திற்கு இராணுவ செயலர் ராபர்ட் கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேளையில் பராக் ஒபாமா நாட்டு மக்களுக்கு, ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ், குவாண்டனமோ சிறைச்சாலை அடைப்பு முதலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
ஏற்கெனவே குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவது தொடர்பாக அவர் நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தற்பொழுது ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப்பெறும் 16 மாதகால திட்டம் ஒன்றை வைத்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பான விவரங்களை கேட்ஸ் விவரிக்கும் வேளையில், "ஈராக்கிலிருந்து இயன்றவரை வேகமாகப் படைகளைத் திரும்ப அழைப்பது குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருவதாகவும் ஒபாமாவின் திட்டத்திற்குத் தங்களின் பூரண ஆதரவு உண்டு" எனவும் தெரிவித்தார்.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக