கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் அருகில் உள்ளூர் நேரம் காலை 3.40 மணி அளவில் குண்டு வெடித்தது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பின் அமைச்சகத்தின் அருகில் அமைந்துள்ள கட்டிடத்தில் குண்டு வெடித்தது.
முதல் குண்டு வெடித்து சுமார் 5 நிமிடங்களுக்குப் பின் உள்ளூர் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்ட "புரட்சிகர அமைப்பு" என்று தங்களைக் கூறிக் கொண்டவர்கள், குண்டுவெடிப்புக்கு தாங்களே காரணம் என்று தெரிவித்தனர்.
முன்னதாக புதன் கிழமை மாலை, ஏதென்சின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரான்சு செய்தி நிறுவனத்தின் அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் அலுவலகம் சற்று சேதமடைந்தது.
ஏதென்ஸ் மற்றும் சலோனிகா நகர்களில் உள்ள அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தூதரகங்கள் மீது கிரேக்க தீவிர இடதுசாரியினர் அவ்வப்பொழுது தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக