அண்மைய செய்திகள்

வியாழன், 4 டிசம்பர், 2008

மரபணு விபரங்ளை பாதுகாப்பது மனித உரிமைக்கு எதிரானது

நவீன உலகில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மரபணு சோதனை நடத்தப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவரையும் மரபணு சோதனைக்குள்ளாக்கி மரபணு விபரங்களை காவல் துறை சேகரித்து வைக்கிறது. ஒருவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் அவரது மரபணு விபரங்கள் காவல் துறையினரால் சேகரித்து வைக்கப்படுகிறது.



இவ்வாறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவர்களின் மரபணு சோதனை விபரங்களை பாதுகாப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் காவல் துறையினரிடம் மட்டும் சுமார் 45 இலட்சம் மரபணு விபரங்கள் சேமிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவால் அவற்றை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


மரபணு மற்றும் கைரேகை தகவல்கள் குற்றங்களைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் குற்றங்களில் சுமார் 3500 குற்றவாளிகள் இத்தகைய மரபணு சேமிப்பிலிருந்தே கண்டுபிடிக்கப்படுவதாகவும் இங்கிலாந்தின் உள்துறைச் செயலளர் ஜாக்யு ஸ்மித் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக