அண்மைய செய்திகள்
வியாழன், 4 டிசம்பர், 2008
ஆப்கன் உளவுத்துறை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு
ஆப்கனின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் இன்று காலை இரு அரசு வளாகங்களில் குண்டு வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயமுற்றனர். ஆப்கன் போதைத் தடுப்பு அலுவலகம் மற்றும் உளவுத்துறை தலைமையகம் அமைந்துள்ள வளாகங்களில் இன்று காலை ஆப்கன் நேரம் 10 மணியளவில் குண்டு வெடித்தது. வெடிகுண்டு நிரப்பிய காருடன் வந்த ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்ததாக துணை ஆளுநர் தாஹிர் கபரி கூறினார். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக