அண்மைய செய்திகள்

செவ்வாய், 2 டிசம்பர், 2008

மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களுக்குத் திரை உலகினர் அஞ்சலி!

மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், ராணுவீரர்கள், அப்பாவி பொது மக்கள் என 183பேர் பலியானார்கள்.

இந்தியா முழுவதும் இந்த தாக்குதல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கும் இரங்கல் கூட்டங்களும் மவுன ஊர்வலங்களும் நடந்து வருகின்றன.

தென்இந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது தியாகராய நகரில் உள்ள நடிகர்சங்க வளாகத்தில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உருவப்படங் கள் வைக்கப்பட்டு இருந்தன. பலியான பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளான தாஜ், ஒபராய் ஓட்டல்கள் நரிமன் ஹவுஸ் போன்ற படங்களுடன் பேனர்களும் வைத்திருந்தனர்.

உருவப்படங்கள் முன் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், கார்த்திக், அர்ஜுன், ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த், பிரசன்னா, தனுஷ், பரத், கார்த்தி, பார்த்திபன், எஸ்.வி.சேகர், ஜீவா,ஜித்தன் ரமேஷ், சரத்பாபு, முரளி, ராஜ்கிரண், ராஜேஷ், சிபிராஜ்,ஜெய், செந்தில், விவேக், சார்லி, அலெக்ஸ், அப்பாஸ், ஷக்தி, ஏ.கே.ராஜேந்திரன் நடிகைகள் ராதிகா, சந்தியா, மும்தாஜ், கீர்த்திசாவ்லா, லதா, சுகன்யா, ஸ்ரீப்ரியா கே.ஆர்.வத்சலா, சத்தியப்ரியா, ஆர்த்தி, குயிலி, எலிசபெத்,ஆகியோரும் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

டைரக்டர்கள் பி.வாசு, வி.சி.குகநாதன், முக்தா சீனிவாசன், தயாரிப்பா ளர்கள் சிவசக்தி பாண்டியன், பட்டியல்சேகர், கே.ராஜன், கலைப்புலிசேகரன் மற்றும் சின்னையன், தீனன், நடேசன், சினிமாமக்கள் தொடர்பாளர் சங்க நிர்வா கிகள் டைமண்ட்பாபு, விஜய முரளி, பெருதுளசி பழனிவேல், கடையம்ராஜு, கணேஷ்குமார், சிங்கார வேலன், பாலன், ரியாஸ், கிளாமர்சத்யா, உள்பட ஏராளமானோர் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். உறுதி மொழி விவரம் வருமாறு:-

வாழ்க பாரதம், வளர்க பாரதம், இனத்தால் மதத்தால், மொழியால் நாம் வேறுபட்டு இருந்தாலும் நம் தேசமக்களின் தாரக மந்திரம் வேற்றுமையில் ஒற்றுமை. அந்த ஒற்றுமையை என்றும் நிலை நாட்டுவோம். ஒன்றுபட்டு பாரதத்தை வலி மையாக்குவோம்.

பாரத தாயின் பிள்ளை களான நாம் அனைவரும் தாயை நேசிப்பது போல் தாய் நாட்டை நேசிப்போம் தாய்மண்ணை காக்கஇன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ அதி காரிகள், ராணுவ வீரர்கள் காவல் துறை அதிகாரிகள், காவல்துறை வீரர்கள் அனைத்து பாரத தாயின் பிள்ளைகளுக்கும் கலையுலகை சார்ந்த உங்கள் சகோதர, சகோதரி களின் வீரவணக்கம். தீவிர வாதிகளால் உயிர் இழந்த நம் தேசத்து வெளிநாட்டு அப்பாவி மக்களுக்கும் எங்களின் உள்ளார்ந்த உணர்வாஞ்சலி மலராஞ்சலி, கண்ணீர்அஞ்சலி.
இன்று முதல் உறுதி ஏற்போம் இந்தியராக இருப்போம். இந்திய தேசம் காப்போம் மனித வதம் தவிர்ப்போம் மனித நேயம் வளர்ப்போம். வேண்டாம் தீவிரவாதம், வேண்டும் தாயக நேசம், வேண்டாம் பிரி வினை வாதம், வேண்டும் பிரிவில்லா பாரத தேசம், தாய்மண்ணே வணக்கம்.

இவ்வாறு உறுதி ஏற்றுக் கொண்டனர்.

மூலம்: மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக