அண்மைய செய்திகள்

புதன், 3 டிசம்பர், 2008

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 தற்கொலைகள்!

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 14 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உறவுகளில் ஏற்படும் விரிசல்கள், மீள முடியாத கடன் தொல்லைகள், நோய் மற்றும் பிற காரணங்களுக்காக இந்த தற்கொலைகள் நடப்பதாக என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.

தற்கொலை செய்துகொள்ளும் 3 நபர்களில் ஒருவர் இள வயதினர் என்றும், 5 நபர்களில் ஒருவர் குடும்பத்தலைவிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.2007ஆம் ஆண்டில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை என்ற தலைப்பில் என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 1,22,637 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.8 விழுகாடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 1,22,367 பேர்களில் பெண்கள் மட்டும் 43,342 பேர்.மா‌நில வாரியாக எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிராவில் மட்டும் 15,184 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

இதற்கு அடுத்த படியாக ஆந்திர மா‌‌நிலம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டில் மட்டும் 14,882 பேர் தற்கொலை செ‌ய்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக