அண்மைய செய்திகள்

வியாழன், 4 டிசம்பர், 2008

பெரியாறு அணை: நாடாளுமன்றக்குழு முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு!

முல்லை பெரியாறு அணை தொடர்பாக நாடாளுமன்றக் குழு தெரிவித்த கருத்தை தமிழகம் ஏற்கவில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

சாம்பசிவராஜ் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கடந்த 1 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டனர். அவர்கள் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்து அணையை ஆய்வு செய்தனர்.

அதற்குள்ளாகவே முல்லைப் பெரியாறு பலவீனமாக உள்ளதென்ற முடிவுக்கு அவர்கள் வந்து, அணை உடைந்தால் கேரளாவின் 5 மாவட்டங்கள் அழிந்துவிடும். எனவே புதிய அணை கட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக, பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

10 நிமிடங்கள் மட்டுமே அணையைப் பார்வையிட்டு அணை பலவீனமாக இருக்கிறது என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் கருத்தை தமிழகம் ஏற்கவில்லை. இது தொடர்பாக தமிழகத்தின் ஆட்சேபனை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக