அண்மைய செய்திகள்

திங்கள், 1 டிசம்பர், 2008

கர்காரேயைக் கொன்றத் தீவிரவாதிகள் மராத்தியர்கள்?

தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் ஹேமந்த் கர்காரேயைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் மராத்தியர்கள் என்றச் சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாதிகள் பேசியது மராட்டி மொழியில் என்று தீவிரவாதிகளை நேரில் பார்த்த சாட்சி கூறுவதாக மராட்டி மொழியில் வெளிவரும் பத்திரிகையான மஹாராஷ்ட்ரா டைம்ஸ் என்ற பத்திரிகை, காமா ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் தொழிலாளியை மேற்க்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மாலேகான் உட்பட பல முக்கிய வெடிகுண்டு வழக்குகளைத் திறம்பட கையாண்டு பல உண்மைகள் வெளிவரக் காரணமாக இருந்த ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே, துணை போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே, என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் ஸாலஸ்கர் ஆகியோரைக் குறிவைத்து தீவிரவாதிகள் ஹ்ட்ரமும்பையில் காமா மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தினார்கள். காமா மருத்துவமனையின் காவாலாளிகளை நோக்கிச் சுட்ட தீவிரவாதிகள், மருத்துவமனையில் இருந்த சாதாரண உடை அணிந்த ஒரு நபரிடம் "நீ இங்கு தொழிலாளியா?" என்று தூய மராத்தி மொழியில் கேட்டதாக அந்தப் பத்திரிகை கூறுகிறது. அதற்கு அந்த நபர்," சத்தியமாக நான் தொழிலாளி இல்லை. எனது மனைவிக்கு இதய நோய் காரணமாக மருத்துவமனை வந்ததாகவும் என்னை விட்டுவிடுங்கள்" என்றும் அவர் தீவிரவாதிகளின் கால் பிடித்து கதறியிருக்கிறார். மீண்டும் "நீ உண்மையிலேயே தொழிலாளி தானே?" என்று சுத்த மராத்தி மொழியில் தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். அதற்கு, அவர் மீண்டும் அவ்வாறு கூறவே அவரை விட்டுவிட்டனர் என்று அந்தப் பத்திரிக்கை கூறுகிறது.

இதன் மூலம் கர்காரையைக் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் என்ற வாதம் பொய்த்து போகிறது. மேலும் 5 ஆயிரம் பேரைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்ற வாதமும் பொய்த்து போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக