அண்மைய செய்திகள்

திங்கள், 1 டிசம்பர், 2008

கலைஞர் குடும்பத்தில் சமரசம்?

சமீபகாலமாக அழகிரி தரப்புக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடைவெளி இருந்து வந்தது. இந்த மனக்கசப்பின் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஒன்றரை வருடமாக பதவியிலிருந்து விலகி இருக்கிறார்.


இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்ற அளவுக்கு பிரச்சினை வலுத்ததும், கலைஞர் முரசொலி இதழில் மாறன் சகோதரர்கள் பற்றி கூறியதும், அதற்கு மாறன் சகோதரர்கள் பதில் அறிக்கை விடுத்திருந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில் கலைஞர் மகள் செல்வி வீட்டில் அழகரி மகள் கயல்விழி இருதரப்புக்கும் இடையே சமரச முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மு.க.ஸ்டாலின், அழகிரி, கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.


இதில் இதுநாள் வரை இருந்த மனக்கசப்புகளை மறந்து இனி ஒற்றுமையாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

இதைத் தொடர்ந்து , கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்கள் தங்களது குடும்பத்தாருடன் சந்தித்து பேசினார்கள்.


அப்போது கலைஞர் குடும்தினருடன் மாறன் சகோதரர்கள் சந்தித்து பேசியதால், மகிழ்ச்சியான சூழல் நிலவியது.


கலைஞர் இல்லத்தில் அழகிரி, அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி மற்றும் குடும்பத்தினர்கள், ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதய நிதி, மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர்கள், மு.க.தமிழரசு குடும்பத்தினர், கலைஞர் மகள் செல்வி, அவரது கணவர் முரசொலி செல்வம் குடும்த்தினர், கலாநிதி அவரது மனைவி காவேரி, தயாநிதி குடும்பத்தினர் ஆகியோர் ஒருவருக்கொருவர் சந்தித்து மகிழ்ச்சியாக பேசினார்கள்.


பின்னர் மாடியில் இருக்கும் கலைஞரின் தனி அறைக்கு சென்ற அனைவரும், கலைஞரிடத்தில் சுமார் அரை மணி நேரம் தங்களுடைய பிரச்சினையை பேசியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக