அண்மைய செய்திகள்

திங்கள், 1 டிசம்பர், 2008

அபாயகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா!

195 உயிர்களைப் பலிகொண்ட மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உலகில் மிகவும் அபாயகரமான 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. பிரிட்டன் பத்திரிக்கையான டெலிகிராப் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கட்டாயத் தேவையைத் தவிர்த்து மும்பைக்கான மற்றைய எல்லா பிரயாணங்களையும் இரத்து செய்ய வேண்டும் என பிரித்தானியர்களுக்குப் பிரிட்டன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக, இஸ்ரேல், மெக்ஸிகோ, தாய்லாந்து, வடகொரியா, செச்னியா, ஜமைக்கா, சுதின், கொலம்பியா, ஹெய்தி, காங்கோ, லைபீரியா, பெரூண்டி, நைஜீரியா, ஜிம்பாப்வே, லபனான் முதலான நாடுகளும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக