அண்மைய செய்திகள்

செவ்வாய், 2 டிசம்பர், 2008

மும்பை தாக்குதலை படமாக்க முயன்ற முதல்வர்?

மும்பை, தீவிரவாதிகளின் தாக்குதலால், பற்றத்தின் பிடியில் இருந்த போது, அதை சினிமாவாக எடுக்க, டைரக்டரை, முதல்-மந்திரி தேஷ்முக் அழைத்து சென்றதால், சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.

மும்பையில் தீவிரவாதிகள்

மும்பையில் கடந்த வாரம், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 187 பேர் பலியானார்கள். அப்போது மும்பை முழுவதும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், தாக்குதல் நடந்த தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், ஓபராய் ஓட்டல் ஆகிய இடங்களுக்கு, சினிமா டைரக்டர் ராம் போபால் வர்மா மற்றும் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் ஆகியோரை, தேஷ்முக் அழைத்து சென்றார்.

இந்த தகவலை அறிந்த நிருபர்கள், தேஷ்முக்கிடம் இதுபற்றி கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

கெட்ட நோக்கம் இல்லை

இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி. இதில் கெட்ட நோக்கம் எதுவும் இல்லை. இதை பெரிது படுத்த வேண்டாம். ஏராளமானவர்கள் அந்த இடத்துக்கு ஆர்வத்துடன் சென்றார்கள். அது போலத்தான் இதுவும்.

வர்மா, ரிதேஷ் ஆகியோர் அங்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். என்னுடன் வர விரும்பினார்கள். எனவே நான் அழைத்துச்சென்றேன். இதில் தவறு எதுவும் இல்லை.

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எங்கும் செல்ல உரிமை உண்டு. நான் மக்களை மதிக்கிறேன். மக்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு தேஷ் முக் கூறினார்.

வர்மா பேட்டி

டைரக்டர் ராம் போபால் வர்மா கூறியதாவது:-

தற்செயலாக நான் முதல்-மந்திரியுடன் சென்றேன். இதை அரசியல் ஆக்க வேண்டாம். தேஷ்முக் எங்களை அழைக்கவில்லை. நாங்களாக அவருடன் சென்றோம்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி நாங்கள் சினிமா தயாரிக்கும் திட்டம் இல்லை. தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டியது, அனைவரது கடமையாகும்.

இவ்வாறு வர்மா கூறினார்.

மூலம்: தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக