அண்மைய செய்திகள்

செவ்வாய், 2 டிசம்பர், 2008

பயங்கரவாதத்திற்கு பதிலடி!

பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மும்பை உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதை அடுத்து, நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் அந்த பொறுப்பிற்கு மாற்றப்பட்டார்.டிச-1 அன்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ப.சிதம்பரத்தை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடம் சிதம்பரம் பேசுகையில், இந்தியா என்ற அடிப்படைக்கு எதிரான மிரட்டல் இது. இந்தியாவின் ஆன்மாவுக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் இது.நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத மிரட்டல்களை அரசு உறுதியுடன் சந்திக்கும். வெற்றி பெறும்.நமது நாட்டிற்கு பயங்கரவாதிகள் விடுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.நமது அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளில் வேறுபட்டு நின்றாலும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வதில் ஒன்றுபட்டு நின்றன.பிரதமர் மன்மோகன் சிங் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த ஒற்றுமையை காண முடிந்தது.

நிலைமையை சமாளிக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் தனியாவும், ஒன்றாகவும் சேர்ந்து முழங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்: தமிழ் சிஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக