அண்மைய செய்திகள்

திங்கள், 1 டிசம்பர், 2008

நாட்டை பிளவுப்படுத்த பாஜக முயற்சி : சோனியா

பயங்கரவாத பிரச்சனையை வைத்துக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துவதற்கு பா.ஜனதா முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாற்றியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பெஹ்ரார் அருகே உள்ள பைதேபா என்ற கிராமத்தில் நடைபெற்ற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :

பா.ஜனதா கட்சிக்கு தேர்தலில் எழுப்ப "பயங்கரவாதம்" என்பதைத் தவிர வேறு எந்த ஒரு சமூக பிரச்சனையும் இல்லை. அவர்கள் எப்போதுமே நாட்டை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யவே முயற்சிக்கிறார்கள்.

மத நல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமைக்கு அவர்கள் குந்தகம் விளைவித்து வருகிறார்கள்.

அந்தக் (பா.ஜனதா) கட்சியை சேர்ந்த தலைவர்தான் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பாக உடன் சென்றார். அந்தக் கட்சியின் தற்போதைய பிரதமர் பதவிக்கான வேட்பாளர் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இவர்கள் பயங்கரவாதத்தைப் பற்றி எவ்வளவு தைரியமாக பேசுகிறார்கள் எனப் பாருங்கள்.

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. ஆனால் அது நாட்டின் மிக மோசமான எதிரி. மற்றவர்களுக்குப் பாடம் நடத்துவதைவிட்டு முதலில் அந்தக் கட்சி தனது (சங் பரிவார) அமைப்புகளை கட்டுப்படுத்தட்டும்.

இடதுசாரி பிரிவு நக்சல்வாதிகளின் பயங்கரவாதம் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில்தான் அதிகரித்துள்ளது" என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக