மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ரகமத்துல்லா குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் உதவித் தொகை வழங்குகிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மும்பை தாஜ் ஹோட்டலில் வேலூர் மாவட்டம், ஆம்பூரைச்சேர்ந்த ரகமத்துல்லா என்பவர் 25 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தவர் கடந்த 26-ந்தேதிஅன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகி அவரது உடல் ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்தச் செய்தியை அறிந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்த ரகமத்துல்லாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் ரகமத்துல்லாவின் குடும்பத்திற்கு வழங்கி இன்று ஆணை பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக இந்த நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக