இன்று திங்கட்கிழமை கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடமபெற்றுள்ளது. இதன்போது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:- |
| சிங்கள இராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வதை கண்டித்தும் தமிழகம் கட்சிகளை கடந்து ஒருமித்த கண்டன குரலை தெரிவித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் உடனே போரை நிறுத்த இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப் படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது. சிங்கள இராணுவத்தின் தமிழினப் படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது. மத்திய ஆட்சியின் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் மந்திரிகளுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் மந்திரிகளுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள். தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும், பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆளாளுக்கு அறிக்கைகளை அளித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமை இல்லை என்று தெரிவிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி தொடரும் என்கிறார்கள். ஏன் இராணுவ உதவியும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள். மத்திய மந்திரி இளங்கோவன் பக்குவமற்ற தன்மையில் பேசுகிறார். இது தேர்தல் வரும் நேரத்தில் வெளிப்படும். அதோடு ஈழச் சிக்கலைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர். மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு பிரதமரை வருகிற 4-ந்தேதி நேரில் சந்திக்க உள்ளனர். இதற்கிடையே 3 நாட்களுக்குள் இணக்கமான முடிவு ஏதும் அறிவிக்கப்படாவிடில் வருகிற 8-ந் தேதிக்கு பிறகு தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும், அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும், அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. காங்கிரசின் இந்த துரோகத்தை எதிர்க்கும் தமிழின உணர்வாளர்கள் இந்தக் கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வருமாறு பெரியார் திராவிடர் கழகம் தோழமையுடன் வேண்டிக்கொள்கிறது. |
அண்மைய செய்திகள்
திங்கள், 1 டிசம்பர், 2008
தமிழகம் வரும் காங். மத்திய மந்திரிகளுக்கு கறுப்புக்கொடி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக