மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் அரசு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், அதிபர் புஷ்ஷின் அறிவுரைக்கு ஏற்ப, ரைஸ் நாளை மறுதினம் டெல்லி வரவுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் எங்கே சென்றாலும் அதனை பாகிஸ்தான் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும், இதில் இந்தியாவிற்கு அந்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக எந்த முடிவிற்கும் இப்போது வருவதற்கில்லை.ஆனால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் பாகிஸ்தான் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரைஸ் தெரிவித்தார்
மூலம்: யாஹூ தமிழ்.
அண்மைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக