அண்மைய செய்திகள்

செவ்வாய், 2 டிசம்பர், 2008

மிஷோராம் தேர்தல்: 2 மணி நேரத்தில் 15% வாக்குப்பதிவு!

மிஷோராம் சட்டசபைக்கு நடைபெற்று வரும் தேர்தலில் 2 மணி நேரத்தில் 15 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 40 உறுப்பினர்களை கொண்ட மிஷோராம் மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை தொடங்கியது.

மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது.இந்த தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரத்து 124 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

இதற்காக, மொத்தம் 1,026 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 பெண் வேட்பாளர்கள், 36 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 205 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு மாநிலத்தையொட்டி உள்ள மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் 2 மணி நேரத்தில் 15 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மூலம்: வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக